என் மலர்
சினிமா செய்திகள்
சூர்யா - ரஜினி மோதல் புதிதல்ல.. கங்குவா Vs வேட்டையன்-ல இது புதுசு.. என்ன தெரியுமா?
- ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகிறது.
- வேட்டையன் வெளியாகும் அதே நாளில்தான் சூர்யாவின் 'கங்குவா' திரைப்படமும் ரிலீசாகிறது.
'ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது.
அக்.11-ந்தேதி ஆயுத பூஜை, விஜயதசமி, வார விடுமுறை என தொடர்ந்து விடுமுறை வருவதால் வேட்டையன் படம் அக்.10-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.
வேட்டையன் திரைப்படம் வெளியாகும் அதே நாளில்தான் சூர்யாவின் 'கங்குவா' திரைப்படமும் ரிலீசாகிறது.
இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே வாரத்தில் வெளியான 2 படங்களின் இயக்குனர்கள் தங்கள் ஹீரோக்களை மாற்றிக்கொண்டு தற்போது ஒரே நாளில் போட்டி போடவுள்ளனர் என்பது தான்.
3 ஆண்டுகளுக்கு முன்பு சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்தே திரைப்படமும் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய் பீம் திரைப்படமும் ஒரே வாரத்தில் வெளியானது.
2021 நவம்பர் 2-ம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றது.
அதே ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்கில் வெளியான அண்ணாத்தே திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வி அடைந்தது.
தற்போது சூர்யாவின் ஜெய்பீம் பட இயக்குநரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படமும், ரஜினிகாந்தின் அண்ணாத்தே பட இயக்குநரின் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படமும் ஒரே நாளில் வெளியாகவுள்ளது.
2021 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் வென்றார். தற்போது நடக்கவுள்ள போட்டியில் ஞானவேல் வெல்வாரா? இல்லை சிறுத்தை சிவா வெல்வாரா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.