என் மலர்
சினிமா செய்திகள்
கால் போன போக்கிலே மனம் போகலாமா!.. வைரலாகும் அஜித்தின் துபாய் வீடியோ
- இதில் குட்பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
- அதன்படி கார் ரேஸிங்கில் கலந்துகொள்வதற்காக நேற்று அஜித் துபாய் சென்றார்.
நடிப்பு, ரேஸிங் என பிசியாக இருக்கும் அஜித் குமார் தற்போது துபாய் சென்றுள்ளார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்திலும் நடித்துள்ளார். இதில் குட்பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
சமீபத்தில் 'அஜித்குமார் ரேஸிங்'என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கி அஜித், தற்போது அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகி்றார்.
அதன்படி கார் ரேஸிங்கில் கலந்துகொள்வதற்காக நேற்று அஜித் துபாய் சென்றார்.
இந்நிலையில், அங்கு தனது அணியினருடன் அஜித் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கார் ரேஸிங்கில் அஜித் களமிறங்க உள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
AK ??️? pic.twitter.com/voVs62ZFfd
— Christopher Kanagaraj (@Chrissuccess) January 6, 2025
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்