என் மலர்
சினிமா செய்திகள்
குட் பேட் அக்லி இயக்குனர் பகிர்ந்த அஜித்தின் புகைப்படம்
- அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை ஆதிக் இயக்கி வருகிறார்.
- திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த 'மார்க் ஆண்டணி' மிகப்பெரிய ஹிட் அடித்தது. அப்படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
இதை தொடர்ந்து அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜித் மூன்று கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சுனில் , நஸ்லேன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
படப்பிடிப்பு பணிகள் ஐதரபாத்தில் சில நாட்கள் நடைப்பெற்றது. அடுத்ததாக பணிகள் ஸ்பெயினில் நடைப்பெறவுள்ளது. படத்தில் நடிகர் பிரசன்னா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் புதிய தோற்றமுடைய புகைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அஜித் ஒயிட் கோட் சூட் அணிந்து சிரித்தவாறு மாஸாக உள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.