என் மலர்
சினிமா செய்திகள்
சிறப்பு போஸ்டர் வெளியிட்டு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த 'அமரன்' படக்குழு
- அமரன் திரைப்படம் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி திரைக்கு வருகிறது.
- இப்படத்தில் ராணுவ உயர் அதிகாரியாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள திரைப்படம் அமரன். உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தில்"முகுந்தன்" என்கின்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக அவர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
மறைந்த இந்திய ராணுவ வீரரான முகுந்தன் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
அமரன் திரைப்படம் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு அமரன் படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
We stand free because they stand strong, salute to our soldiers!#HappyIndependenceDay wishes from #Amaranhttps://t.co/AWu82H0a3U#AmaranDiwali#AmaranOctober31#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SaiPallavi #RajkumarPeriasamy@ikamalhaasan @Siva_Kartikeyan… pic.twitter.com/gk9W4NbWPT
— Raaj Kamal Films International (@RKFI) August 15, 2024