என் மலர்
சினிமா செய்திகள்
கூலி படத்தைக் குறித்து படக்குழு கொடுத்த சுவாரசிய அப்டேட்
- ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் 'வேட்டையன்' படத்தில் நடித்துள்ளார்.
- அடுத்ததாக ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் 'வேட்டையன்' படத்தில் நடித்துள்ளார். படத்தில் அமிதாப்பச்சன், பகத்பாசில், துஷாரா விஜயன், மஞ்சுவாரியர் உள்பட பலர் நடித்திருந்தனர். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற அக்டோபர் 10-ந்தேதி படம் திரைக்கு வர இருக்கிறது.
அடுத்ததாக ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்று வருகிறது.
முதற்கட்டமாக ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தில் ஏற்கனவே சத்யராஜ், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகியது.
இதுக் குறித்து படக்குழு தற்பொழுது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர். படத்தின் கதாப்பாத்திரத்தின் அறிவிப்பு நாளை மாலை 6 மணி முதல் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் யார் யார் இப்படத்தில் நடித்து இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.