என் மலர்
சினிமா செய்திகள்
அமரன் படக்குழுவுக்கு வாழ்த்து சொன்ன அனிருத்
- அமரன் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
- அமரன் திரைப்படம் வசூலில் ரூ. 100 கோடியை கடந்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் "அமரன்." இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஜி.வி. பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சினிமா ரசிகர்கள், திரை பிரபலங்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை பலர் அமரன் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், முன்னணி இசையமைப்பாளர் அனிருத் அமரன் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "அமரன் சிறந்த சினிமாவாக உள்ளது. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு சிவகார்த்திகேயனை நினைத்து பெருமையாக உள்ளது. என் சகோதரர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் படக்குழுவை சேர்ந்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இத்துடன் நடிகர் கமல்ஹாசன், மகேந்திரன் மற்றும் டிஸ்னி ஆகியோரை குறிப்பிட்டு வணக்கம் செலுத்தும் எமோஜியை சேர்த்துள்ளார்.
இவரது பதிவுக்கு பதில் அளித்த நடிகர் சிவகார்த்திகேயன், "நன்றி, டியர் அனிருத். உங்களிடம் இருந்து இது வருவது ஸ்பெஷல். விரைவில் சென்னை வந்துவிடுவேன், நாம் ஒன்றாக கொண்டாடுவோம், சார்," என பதிவிட்டுள்ளார்.
Thank you, my dear @anirudhofficial. This coming from you is always special. ❤️❤️I'll be back to Chennai soon; we shall celebrate, sirrrr ?? https://t.co/k2rm6TEqi6
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) November 6, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.