என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![அஜித்துடன் மீண்டும் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்த அருண் விஜய் அஜித்துடன் மீண்டும் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்த அருண் விஜய்](https://media.maalaimalar.com/h-upload/2025/02/05/8968084-arun-vijay-ajith.webp)
அஜித்துடன் மீண்டும் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்த அருண் விஜய்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- என்னை அறிந்தால் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வில்லன் கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்திருந்தார்.
- என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அருண் விஜய்க்கு பட வாய்ப்புகள் அதிகரித்தன.
கடந்த 2015-ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் 'என்னை அறிந்தால்'. இந்த படத்தில் திரிஷா, அனுஷ்கா, அருண் விஜய், நாசர், பார்வதி நாயர் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாராட்டுகளை குவித்தது. இப்படத்தில் அஜித்துக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த வில்லனாக அருண் விஜய் நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு அருண் விஜய்க்கு பட வாய்ப்புகள் அதிகரித்தன.
இந்நிலையில், 'என்னை அறிந்தால்' திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி அருண் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், மீண்டும் அஜித்துடன் இணைவது குறித்து நடிகர் அருண் விஜய் விருப்பம் தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
10 years of #YennaiArindhaal!!?#Sathya ? #Victor ?Hope and waiting to create the same magic again!!?✌?@menongautham @trishtrashers @Jharrisjayaraj pic.twitter.com/mhQsAFt0o6
— ArunVijay (@arunvijayno1) February 5, 2025