என் மலர்
சினிமா செய்திகள்
சிம்புவின் 51-வது படத்தின் டைட்டில் வெளியீடு
- சிம்புவின் 51-வது படத்தின் டைட்டில் அறிவிப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
- இப்படத்துக்கு 'காட் ஆப் லவ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நடிகர், பாடகர் என பல பரிணாமங்கள் கொண்ட சிலம்பரசன் தற்போது தயாரிப்பாளராகவும் களம் இறங்கியுள்ளார். அவரது பிறந்தநாளான இன்று, சொந்தமாக 'அட்மேன் சினி ஆர்ட்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள நடிகர் சிம்பு 50-வது பட அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். இந்த படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இதை தொடர்ந்து சிம்புவின் 51-வது படத்தின் டைட்டில் அறிவிப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்துக்கு 'காட் ஆப் லவ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'காட் ஆப் லவ்' திரைப்படம் கோடை விடுமுறையின்போது வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Happiest birthday @SilambarasanTR_ ?காதல் இருக்கும் பயத்தினில் தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை…மீறி அவன் பூமி வந்தால்…?❤️??#HBDSilambarasanTR Kattam Katti Kalakrom ?#VintageSTRmood#STR51 #AGS27#KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh@SilambarasanTR_… pic.twitter.com/M0QgUD2Gw5
— Archana Kalpathi (@archanakalpathi) February 3, 2025