என் மலர்
சினிமா செய்திகள்
பேபி ஜான் திரைப்படத்தின் Pikley Pom பாடல் வெளியீடு

- இயக்குநர் ஏ. காளீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பேபி ஜான்'.
- கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்த இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்துள்ளார்.
இயக்குநர் ஏ. காளீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பேபி ஜான்'. தமிழில் வெளியான 'தெறி' திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்த இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் எண்டர்டெய்னராக தயாராகியுள்ள இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குநர் அட்லியின் தயாரிப்பு நிறுவனமான ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரியா அட்லீ ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்தப் படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
அண்மையில் பேபி ஜான் படத்தின் 'நைன் மடாக்கா' பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான பிக்லி பாம் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் வருண் தவான் மற்றும் அவரது மகளுக்கும் நடக்கும் பாடலாக அமைந்துள்ளது. இப்பாடல் கேரளா மாநிலத்தில் நடப்பது போல் காட்சிகள் அமைந்துள்ளது. இதுவரை இப்பாடல் 54 லட்ச பார்வைகளை யூடியூபில் கடந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.