search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நீதிமன்ற ஆவணங்களை போலியாக தயாரித்ததாக மனைவி புகார்- நடிகர் பாலா மீது மோசடி வழக்கு
    X

    நீதிமன்ற ஆவணங்களை போலியாக தயாரித்ததாக மனைவி புகார்- நடிகர் பாலா மீது மோசடி வழக்கு

    • இருவரும் கடந்த 2016-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
    • பாலா வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

    கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த பிரபல நடிகர் பாலா. இவர் மலையாள படங்கள் மட்டுமின்றி தமிழில் காதல் கிசுகிசு, கலிங்கா, வீரம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களிலும் நடத்துள்ளார்.

    இவரும், பிரபல பாடகருமான அம்ருதா சுரேசும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் அவர்கள் இருவரும் கடந்த 2016-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகு பாலா வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

    இந்தநிலையில் தன்னையும், தனது மகளையும் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு தகவல்களை வெளியிடுவதாக பாலா மீது அம்ருதா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புகார் செய்தார். அதன்பேரில் கைது செய்யப்பட்ட அவர் பின்பு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

    இந்தநிலையில் தற்போது மேலும் ஒரு புகாரை பாலா மீது அம்ருதா கொடுத்துள்ளார். தங்களின் விவாகரத்து தொடர்பான நீதிமன்ற ஆவணங்களை போலியாக தயாரித்ததாக பாலா மீது புகார் கூறியிருக்கிறார். அதன் பேரில் நடிகர் பாலா மீது எர்ணாகுளம் மத்திய போலீஸ் நிலையத்தில் மோசடி மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×