என் மலர்
சினிமா செய்திகள்

பரத் - சசிகுமார் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது

- பரத் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் பூஜை விழா இன்று நடைப்பெற்றது.
- படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் அனைவரும் இந்த பூஜை விழாவில் கலந்துக் கொண்டனர்.
நடிகர் பரத் ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ் திரைப்படத்திற்கு பிறகு காளிதாஸ் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
இந்நிலையில் பரத் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் பூஜை விழா இன்று நடைப்பெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குனரான எம். குரு இயக்குகிறார். படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் அனைவரும் இந்த பூஜை விழாவில் கலந்துக் கொண்டனர்.
இப்படத்தில் சசிக்குமார் மற்றும் சத்யராஜ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேகா ஷெட்டி மற்றும் மாளவிகா கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் எம்.எஸ் பாஸ்கர், ஆடுகளம் நரேன், கஞ்சா கருப்பு, இந்துமதி மற்றும் ஜோ மல்லூரி நடிக்கவுள்ளனர்.
படத்தின் ஒளிப்பதிவை சதீஷ் குமார் மற்றும் இசையமைப்பை என்.ஆர் ரகுநந்தன் இசையமைக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பட்டுக்கோட்டை, மன்னார்குடி, தஞ்சாவூர், வேதாரன்யம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைப்பெற இருக்கிறது. இப்படத்தை தர்மராஜ் வேலுசாமியின் ஸம்பாரா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.