என் மலர்
சினிமா செய்திகள்
பிளாக்& வைட்டில் பிரம்மாண்ட கப்பல் - கார்த்தி 29 போஸ்டர் வெளியிட்ட படக்குழு
- கார்த்தி அடுத்ததாக பிரேம் குமார் இயக்கத்தில் மெய்யழகன் திரைப்படத்தில் நடித்ததுள்ளார்
- டாணாக்காரன் இயக்கிய இயக்குனர் தமிழ் உடன் இணைந்து கார்த்தி 29 படம் நடிக்கவுள்ளார் .
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் முன்னணி நடிகர் கார்த்தி நடித்து கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சர்தார். இப்படம் மக்கள் மத்தியிலும் வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
இதைத்தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில் டாணாக்காரன் இயக்கிய இயக்குனர் தமிழ் உடன் இணைந்து படம் நடிக்கவுள்ளார் . இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளனர். இப்படம் கார்த்திக்கு 29 திரைப்படமாகும்.
படத்தின் முதல் போஸ்டரை தயாரிப்பு குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதில் ஒரு கப்பல் கடலில் இருக்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. திரைப்படம் 2025 ஆண்டு வெளியாகவுள்ளது. படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கார்த்தி அடுத்ததாக பிரேம் குமார் இயக்கத்தில் மெய்யழகன் திரைப்படத்தில் நடித்து வரும் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.