என் மலர்
சினிமா செய்திகள்
போலீசார் பெட்ரூமில் நுழைந்தனர்: கைது குறித்து நீதிமன்றத்தில் அல்லு அர்ஜூன் தகவல்
- அல்லு அர்ஜூன மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
- இன்று விசாரணை நடத்திய போலீசார் கைது செய்யதாக தெரிவித்தனர்.
அல்லு அர்ஜூன் தியேட்டரில் புஷ்பா 2 படம் பார்க்க சென்றபோது, திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண் ஒருவர் பலியானார். இது தொடர்பாக தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று போலீசார் அல்லு அர்ஜூன் வீட்டிற்கு சென்றனர். அப்போது அவரை விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக கூறி அழைத்துச் சென்றனர். பின்னர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது போலீசார் தனது பெட்ரூமில் நுழைந்தனர் என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் போலீசார், அல்லு அர்ஜூனுக்கு வழங்கக்கூடிய அனைத்து மரியாதைகளும் வழங்கப்பட்டன என்றனர். இதை மறுத்த அல்லு அர்ஜூன் "சார், நீங்கள் எல்லா மரியாதையும் அளிக்கவில்லை. நாங்கள் உங்களிடம் ஆடையை மாற்றிக் கொள்கிறேன் எனக் கேட்டேன். என்னுடன் ஒருவரை அனுப்பி வையுங்கள் என்றேன். நீங்கள் என்னை அழைத்து செல்வதில் தப்பு இல்லை. ஆனால் என்னுடைய பெட்ரூம் வரைக்கும் வந்தது டூ மச் (Too much). நல்லது அல்ல" எனத் தெரிவித்தார்.
அல்லி அர்ஜூன் தனது கைதை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரிய மனுவில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.