என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![அஜித்தை சாடினாரா விக்னேஷ் சிவன்? - வைரலாகும் இன்ஸ்டா பதிவு அஜித்தை சாடினாரா விக்னேஷ் சிவன்? - வைரலாகும் இன்ஸ்டா பதிவு](https://media.maalaimalar.com/h-upload/2025/02/06/9002754-newproject-2025-02-06t144704768.webp)
அஜித்தை சாடினாரா விக்னேஷ் சிவன்? - வைரலாகும் இன்ஸ்டா பதிவு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி.
- ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி படையெடுத்து வந்து திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி.
இந்த நிலையில், பல்வேறு தடைகளை தாண்டி இன்று (பிப்ரவரி 6) விடாமுயற்சி திரைப்படம் உலகம் முழுக்க திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. நடிகர் அஜித் குமாரின் திரைப்படம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரிலீஸ் ஆகியுள்ளதை அடுத்து, ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி படையெடுத்து வந்து திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
அந்தவகையில் விடாமுயற்சி படத்தின் முதல் காட்சியை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகை திரிஷா, ரெஜினா மற்றும் பல திரையுலக பிரபலங்கள் திரையரங்கில் ரசிகர்களுடன் கண்டு களித்தனர்.
இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரி இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது. அதில் அவர் குறிப்பிட்டுள்ளது " நல்லதை செய்தால் நல்லதே திரும்ப கிடைக்கும்." " மற்ற விஷயங்கள் எப்படி நடக்கும் என வருத்த படாமல் இருந்தாலே நமக்கு பல நன்மைகள் நடக்கும்" என பதிவிட்டுள்ளார்.
அஜித் குமாரின் 62 - வது திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க வேண்டியது ஆனால் அந்த வாய்ப்பு சூழ்நிலை காரணமாக நடக்காமல் போய்விட்டது. அந்த வாய்ப்பு இயக்குனர் மகிழ் திருமேனிக்கு கிடைத்தது. இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படம் வெளியான இன்று அவர் பதிவிட்ட இந்த பதிவு ஒருவேளை அஜித் குமாரை சாடி போடப்பட்ட பதிவா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
![](https://media.maalaimalar.com/h-upload/2025/02/06/9003031-newproject-2025-02-06t144516377.webp)
இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமார், ஆரவ், அர்ஜூன் உள்பட திரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.