என் மலர்
சினிமா செய்திகள்
ஓட்டலை விலைக்கு கேட்டாரா விக்னேஷ் சிவன்? புதுச்சேரி சுற்றுலா அமைச்சர் கொடுத்த பதில்
- விக்னேஷ் சிவன் புதுச்சேரி சுற்றுலா அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்தார்.
- பிரதீப் ரங்கநாதன் மற்றும் கிருத்தி ஷெட்டி இணைந்து நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்பொழுது பிரதீப் ரங்கநாதன் மற்றும் கிருத்தி ஷெட்டி இணைந்து நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் நயன்தாரா வின் ஆவண திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் விக்னேஷ் சிவன் புதுச்சேரி சுற்றுலா அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்தார். புதுச்சேரியில் சில இடங்களில் ஷூட்டிங் செய்வதற்கும் இசை கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான பேச்சு வார்த்தை நடந்தது.
அந்த பேச்சு வார்த்தையில் விக்னேஷ் சிவன் புதுச்சேரி அரசுக்கு உரிமையான `சீகல்ஸ்' ஓட்டலை விலை கேட்டதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளத்து விக்னேஷ் சிவன் அவர் தரப்பு பதிலை அறிக்கையாக நேற்று வெளியிட்டார்.
தற்பொழுது அந்த சர்ச்சையை விளக்கி புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசியுள்ளார் அவர் கூறியதாவது " இயக்குனர் விக்னேஷ் சிவன் என்னை சந்தித்து புதுச்சேரியில் சில இடங்களில் படப்பிடிப்பு செய்ய அனுமதிகளையும், கலை நிகழ்ச்சிகளை நடத்த இடங்களை பற்றி விசாரித்தார். அப்பொழுது அவருடன் வந்த உள்ளூர் சினிமாத்துறை நபர் புதுச்சேரி சுற்றுலா துறைக்கு சொந்தமான சீகல்ஸ் ஓட்டலை விற்க போகிறீர்களா? அப்படி விற்றா என்ன விலை போகும் ? என்ற மாதிரியான கேள்வியை கேட்டார். அரசாங்கத்தின் இடத்தை யாருக்கும் விற்க அனுமதி இல்லை. புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு சொத்துகளும் குடியரசு தலைவரின் பெயரில் இருக்கிறது" என கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.