என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![விடாமுயற்சி FDFS.. படம் பார்த்த பின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் ரியாக்ஷன் விடாமுயற்சி FDFS.. படம் பார்த்த பின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் ரியாக்ஷன்](https://media.maalaimalar.com/h-upload/2025/02/06/9001166-vmmvv.webp)
விடாமுயற்சி FDFS.. படம் பார்த்த பின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் ரியாக்ஷன்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- விடாமுயற்சி திரைப்படம் உலகம் முழுக்க ரிலீஸ் ஆனது.
- இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் நீண்ட காலமாக எடுக்கப்பட்டு வந்தது. மேலும், இந்தப் படத்தின் ரிலீஸ் பலமுறை ஒத்திவைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், பல்வேறு தடைகளை தாண்டி இன்று (பிப்ரவரி 6) விடாமுயற்சி திரைப்படம் உலகம் முழுக்க திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. நடிகர் அஜித் குமாரின் திரைப்படம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரிலீஸ் ஆகியுள்ளதை அடுத்து, ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி படையெடுத்தனர்.
அந்தவகையில் விடாமுயற்சி படத்தின் முதல் காட்சியை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் திரையரங்கில் ரசிகர்களுடன் கண்டு களித்தார். திரைப்படம் முடிந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஆதிக் ரவிச்சந்திரன், "விடாமுயற்சி FDFS பிளாக்பஸ்டர் மாமே.. AK சார்.. விடாமுயற்சி குழுவுக்கு வாழ்த்துக்கள்," என குறிப்பிட்டுள்ளார்.
#VidaamuyarchiFDFS Blockbuster Mamae ⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️AK sir⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️ congratulations to team #VidaaMuyarchi ❤️?? pic.twitter.com/7F0zJ3Z8Dv
— Adhik Ravichandran (@Adhikravi) February 6, 2025
இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமார், ஆரவ், அர்ஜூன் உள்பட திரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீசை ஒட்டி கடந்த சில நாட்களில் இந்தப் படத்தின் சிறப்பு போஸ்டர், வீடியோக்களை படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வந்தது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.