என் மலர்
சினிமா செய்திகள்
அமரன் 100-வது நாள் - இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி நெகிழ்ச்சி பதிவு
- இப்படம் உலகளவில் மாபெரும் வெற்றியடைந்து வசூலிலும் சாதனை படைத்தது.
- இந்தக் கதையில் இரண்டு துணிச்சலான இதயங்களின் கதையைச் சொல்ல முடிந்திருப்பது பெரும் மகிழ்ச்சி.
'ரங்கூன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. இவருடைய இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் 'அமரன்'. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல், சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா தயாரித்தது.
கடந்த ஆண்டு தீபாவளி நாளான அக்டோபர் 31-ந்தேதி வெளியானது. மேலும் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியானது. இப்படம் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த தமிழ் நாட்டை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது.
சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாகவும், இந்து ரெபேக்கா வர்கீஸாக சாய் பல்லவியும், பவண் அரோரா, ராகுல் போஸ், லல்லு, அனுன் பாவ்ரா, அஜே நாக ராமன், மீர் சல்மான், கௌரவ் வெங்கடேசு, ஸ்ரீ குமார் ஆகியோரும் நடித்திருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த இப்படம் உலகளவில் மாபெரும் வெற்றியடைந்து வசூலிலும் சாதனை படைத்தது.
இந்த நிலையில், 'அமரன்' படம் வெளிவந்து 100 நாட்களை தாண்டிய நிலையில், சிப்பாக் விக்ரம் இல்லாமல் இப்படம் முழுமையடையாது என்று இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
இந்தக் கதையில் இரண்டு துணிச்சலான இதயங்களின் கதையைச் சொல்ல முடிந்திருப்பது பெரும் மகிழ்ச்சி. கடமையால் பிணைக்கப்பட்டு, அவர்களின் மரபால் அழியாத மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் சிப்பாய் விக்ரமின் பிணைப்பு சகோதரத்துவம் மற்றும் தோழமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு!
சிப்பாய் விக்ரமை உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்காக அவரது குடும்பத்தினரின் தாராள மனப்பான்மைக்கு எனது மனமார்ந்த நன்றி. வணக்கங்கள் மற்றும் அன்பு," என்று பதிவிட்டுள்ளார்.
Towards #100daysofamaran ,#Amaran wouldn't be complete without #SepoyVikram , SC (#ShauryaChakra)
— Rajkumar Periasamy (@Rajkumar_KP) February 6, 2025
More than a pleasure, it's been a privilege to have been able to tell the story of two brave-hearts in this tale. Bound by duty and immortalised by their legacy,… pic.twitter.com/fm4kDbOFbo
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.