என் மலர்
சினிமா செய்திகள்

தமிழ் படங்களின் வெற்றி சதவீதம் 4 முதல் 6% தான் - விநியோகஸ்தர் குகன் வருத்தம்

- மர்மர் திரைப்படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு காரணமாக திரைகள் எண்ணிக்கை அதிகரிப்பு.
- மர்மர் திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றி பெற்றதாக தகவல்.
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக "மர்மர்" உருவாகி இருக்கிறது. மர்மர் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான மர்மர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வெற்று வருகிறது.
முதற்கட்டமாக இந்தப் படம் 100 திரைகளில் மட்டுமே வெளியானது. எனினும், ரசிகர்களின் பெரும் ஆதரவோடு இந்தத் திரைப்படம் ரிலீசான இரண்டாவது நாளில் இதன் திரைகள் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்தது.
தொடர்ந்து இந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், மர்மர் படக்குழு சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் மர்மர் திரைப்படத்தின் விநியோகஸ்தர் குகன் கூறும் போது, "தற்போது புதிய இயக்குநர் அல்லது தயாரிப்பாளர் வருகிறார்கள் எனில், தமிழ்நாட்டில் தமிழ் படங்களின் வெற்றி சதவீதம் 5 முதல் 6 சதவீதமாகத் தான் இருக்கிறது."
"வருடத்திற்கு 250 திரைப்படங்கள் வரும் பட்சத்தில் அவை அனைத்தும் வெற்றி பெறுவதில்லை. இதில் மாதம் ஒரு படம் தான் வெற்றி பெறுகிறது. ஒரு படம் கணக்கெடுக்கும் போது 4 முதல் 6 சதவீத படங்கள் தான் பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றியாக இருக்கும். தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும் என்று பார்த்தால் வெறும் 4 முதல் 6 சதவீதமாகத் தான் இருக்கும்," என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.