என் மலர்
சினிமா செய்திகள்
ஜெய் நடித்துள்ள பேபி & பேபி படத்தின் 'என்ன தவம்' பாடல் வெளியானது
- பேபி& பேபி படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
- இப்பாடலை யுகபாரதி வரிகளில் அரிஷ் ராகவேந்திரா மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ளனர்.
நடிகர் ஜெய் நடித்துள்ள திரைப்படம் பேபி& பேபி. இத்திரைப்படத்தை பிரதாப் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ஜெய்யுடன், யோகி பாபு, சத்யராஜ், கீர்த்தனா, சாய் தன்யா, பிரக்யா நக்ரா, இளவரசு, ஸ்ரீமன், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, சிங்கம்புலி, தங்கதுரை, ராமர், ராஜேந்திரன், சேஷு, பிரத்தோஷ் மற்றும் பலர் என நகைச்சுவை நடிகர்களின் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். யுவராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. திரைப்படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், இப்படத்தின் 'என்ன தவம்' என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது. இப்பாடலை யுகபாரதி வரிகளில் அரிஷ் ராகவேந்திரா மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
? The much awaited 3rd single from 'Baby & Baby' is out now.Listen to 'Enna Thavam Seitheno' - https://t.co/54lLEOo7Yb#DImmanMusicalPraise God! ? Singers: Harish Raghavendra & Swetha Mohan ? Lyrics: Yugabharathi @YugabhaarathiYb @_ShwetaMohan_ @singerharish… pic.twitter.com/O4oLljQuGc
— D.IMMAN (@immancomposer) January 22, 2025