என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![அரசியலுக்கு அனைவரும் வரலாம்: இயக்குனர் மாரி செல்வராஜ் அரசியலுக்கு அனைவரும் வரலாம்: இயக்குனர் மாரி செல்வராஜ்](https://media.maalaimalar.com/h-upload/2024/06/01/2425203-19.webp)
அரசியலுக்கு அனைவரும் வரலாம்: இயக்குனர் மாரி செல்வராஜ்
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg)
- உளவியல் ரீதியாக அனைவரது மனதிலும் ஜாதி உள்ளது.
- அனைவரும் ஒன்றிணைந்து படம் பார்ப்பது திரையரங்கில் தான்.
நெல்லை:
தூத்துக்குடியில் சினிமா படப்பிடிப்பிற்காக இயக்குனர் மாரி செல்வராஜ் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தார். அப்போது அங்கு செய்தியாளர்களை சந்தித்த மாரி செல்வராஜ் கூறியதாவது:-
தென் மாவட்டத்தில் உளவியல் ரீதியாக அனைவரது மனதிலும் ஜாதி உள்ளது. இது அவர்களது மனதில் ஆழமாக பதிந்துள்ளது. இதனை ஒரே நாளில் மாற்ற முடியாது. ஆனால் எல்லாம் மாறும். எல்லோரும் ஒன்றாக சேர்ந்து நுணுக்க மாக கலைத்துறை, அரசியல் உள்ளிட்டவைகளின் மூலம் அழுத்தமான வேலையை முன்னெடுக்க வேண்டி உள்ளது. அப்படி செய்தால் தான் அடுத்த தலைமுறையில் மாற்றம் வரும். புரிதலுக்கு உள்ளாகும்.
தற்போது படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகிறது. அனைவர் வீட்டிலும் பூஜை அறை உள்ளது. இருந்தபோதிலும் கோவிலுக்கு சென்று தான் சாமி கும்பிடுகிறார்கள். அதேபோல் அனைவரும் ஒன்றிணைந்து படம் பார்ப்பது திரையரங்கில் தான். அது என்றும் மாறாது. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது அவரது விருப்பம். அரசியலுக்கு அனைவரும் வரலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.