என் மலர்
சினிமா செய்திகள்

அஜித்குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

- 'குட் பேட் அக்லி' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- இத்திரைப்படத்தில் ரம்யா என்ற கதாப்பாத்திரத்தில் திரிஷா நடித்துள்ளார்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இந்தப் படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் பின்னணி இசையை மேற்கொள்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டன.
'குட் பேட் அக்லி' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர், வரும் 28ம் தேதி வெளியாகும் என படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
#GoodBadUglyTeaser on February 28th ❤️?? #AjithKumar sir @MythriOfficial @SureshChandraa sir ❤️?? #GoodBadUgly from April 10th❤️?? pic.twitter.com/0IFdpWCxFM
— Adhik Ravichandran (@Adhikravi) February 25, 2025