என் மலர்
சினிமா செய்திகள்
'விடாமுயற்சி'- சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி
- படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
- இப்படத்தின் டிரெய்லர், பிடிஎஸ் வீடியோக்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "விடாமுயற்சி." இந்தப் படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழை தணிக்கைக்குழு வழங்கி உள்ளது. இப்படத்தின் டிரெய்லர், பிடிஎஸ் வீடியோக்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் நாளை (பிப்ரவரி 6) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. நாளை 'விடாமுயற்சி' வெளியாவதை அடுத்து படத்தின் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், நாளை 'விடாமுயற்சி' படத்தின் சிறப்பு காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகள் நாளை மட்டும் திரையிட அரசு அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.