என் மலர்
சினிமா செய்திகள்

துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் அப்டேட்டை கூறிய ஹாரிஸ் ஜெயராஜ்

- நடிகர் விக்ரம் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி, தயாரித்துள்ள படம் 'துருவ நட்சத்திரம்'.
- சமீபத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் மலையாளத்தில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படத்தை இயக்கினார்.
நடிகர் விக்ரம் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி, தயாரித்துள்ள படம் 'துருவ நட்சத்திரம்'. முதலில் சூர்யாவை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை 2010 ஆம் ஆண்டு துவங்கினார் கௌதம் மேனன். ஆனால் கதையில் உடன்பாடு இல்லாத காரணத்தால் இப்படத்தில் இருந்து சூர்யா விலகினார்.
இக்கதையை கேட்ட விக்ரம் இப்படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டார். அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு இப்படம் துவங்கப்பட்டது. நிதி பிரச்சனை உட்பட பல பிரச்சனையின் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது தடைபட்டது. இருந்தாலும் அந்த தடைகளை எல்லாம் கடந்து ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்தது. இதையடுத்து இப்படம் வெளியாவது தள்ளிக்கொண்டே போனது.
பலமுறை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டாலும், அந்த தேதியில் திரைப்படத்தை படக்குழுவால் வெளியிட முடியவில்லை. சமீபத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் மலையாளத்தில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் மம்மூட்டி கதாநாயகனாக நடித்து இருந்தார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் துருவ நட்சத்திரம் திரைப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை அண்மையில் கலந்துக் கொண்ட இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். இதனைக் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.