என் மலர்
சினிமா செய்திகள்
பிளாக்கில் டிக்கெட் வாங்கி "ஜென்டில் மேன்" திரைப்படத்தை பார்த்தேன் - பவன் கல்யாண்
- இயக்குநர் சங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்துள்ள படம் 'கேம் சேஞ்சர்'.
- பொங்கலை முன்னிட்டு இப்படம் வருகிற 10-ந்தேதி வெளியாக உள்ளது.
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்துள்ள படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொங்கலை முன்னிட்டு இப்படம் வருகிற 10-ந்தேதி வெளியாக உள்ளது. அதனால் தற்போது இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நேற்று நடந்த விழாவில் ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது " நான் திரையரங்கில் திரைப்படம் பார்ப்பது மிகவும் குறைவு. நான் சென்னையில் இருக்கும்பொழுது நான் ஷங்கர் இயக்கத்தில் வெளியன ஜென்டில் மேன் திரைப்படத்தின் டிக்கெட்டை பிளாக்கில் வாங்கி பார்த்தேன். காதலன் திரைப்படத்தை என்னுடைய பாட்டியுடன் சென்று பார்த்தேன்." என கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.