search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இந்தியன் 2-க்கு இவ்வளவு எதிர்மறை விமர்சனம் வரும்ன்னு நான் எதிர்பாக்கல - ஷங்கர்
    X

    இந்தியன் 2-க்கு இவ்வளவு எதிர்மறை விமர்சனம் வரும்ன்னு நான் எதிர்பாக்கல - ஷங்கர்

    • "இந்தியன் 2" திரைப்படம் கடந்த ஜூலை 12-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது.
    • கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவான "இந்தியன் 2" திரைப்படம் கடந்த ஜூலை 12-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான "இந்தியன்" படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது. சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்தார்.

    இந்த படத்தில் கமல்ஹாசனுடன் எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா, அயன் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது.

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகு மக்களிடம் இருந்து நிரைய எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தது. இந்தியன் 2 திரைப்படத்தின் முடிவில் இந்தியன் 3 திரைப்படத்திற்கான டிரெய்லர் இடம் பெற்றிருக்கும். இந்த எதிர்மறை கருத்தினால் இந்தியன் 3 திரைப்படம் வெளியாவதில் சிக்கல்கள், திரையரங்கில் வெளியாக வாய்பில்லை போன்ற செய்திகள் பரவின.

    அதற்கெல்லாம் பதிலளிக்கும் படி சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றிம் இயக்குனர் ஷங்கர் பதிலளித்துள்ளார் அதில் அவர் " இந்தியன் 2 திரைப்படத்திற்கு இவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் வரும் என நான் எதிர்ப்பார்க்கவில்லை. இதனால் நான் என்னுடைய சிறந்த மற்றும் கடின உழைப்பை கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் 3 திரைப்படத்திற்கு அளித்துள்ளேன். இந்தியன் 3 திரைப்படம் கண்டிப்பாக திரையரங்கில் வெளியாகும். கேம் சேஞ்சர் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. ராம் சரணுக்கு மிகப்பெரிய கதாப்பாத்திரமாக அமைந்துள்ளது இப்படம். " என கூறியுள்ளார்.

    கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×