என் மலர்
சினிமா செய்திகள்
ரத்தன் டாடாவிற்கு 'லிப்ட்' கொடுத்தேன், என்னிடம் அவர் கடன் வாங்கினார்- அமிதாப் பச்சன்
- ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர்.
- 'அமிதாப் எனக்கு கொஞ்சம் கடன் கொடுக்க முடியுமா? என் ரத்தன் டாடா என்னிடம் கேட்டார்.
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது86) வயது முதிர்வு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர்.
உயிரிழந்த ரத்தன் டாடா உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக மும்பையில் வைக்கப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து மும்பையில் உள்ள வொர்லி மயானத்திற்கு எடுத்துவரப்பட்டு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்தியில் 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் அமிதாப் பச்சன் மறைந்த ரத்தன் டாடா குறித்து தனது அனுபவங்களை அந்நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ரத்தன் டாடா குறித்து அந்நிகழ்ச்சியில் பேசிய அமிதாப் பச்சன், "ஒருமுறை நானும் ரத்தன் டாடாவும் லண்டனுக்கு விமானத்தில் ஒன்றாக பயணம் செய்தோம். ஹீத்ரோ விமான நிலையத்தில் நாங்கள் தரையிறங்கினோம். அப்போது ரத்தன் டாடாவால் அவரது உதவியாளரை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது விமான நிலையத்தில் இருந்த போன் பூத்திருக்கு சென்று வெளியே வந்த டாடா என்னிடம் வந்து 'அமிதாப் எனக்கு கொஞ்சம் கடன் கொடுக்க முடியுமா? போன் செய்ய என்னிடம் பணம் இல்லை' என்று கூறினார்.
ரத்தன் டாடாவுடன் நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். நிகழ்ச்சி முடிந்ததும் டாடா என்னிடம் வந்து என்னை என்னுடைய வீட்டில் இறக்கி விட முடியுமா? நான் உங்கள் வீட்டிற்கு பின்னால் தான் வசிக்கிறேன். என்னிடம் கார் இல்லை என்று கூறினார். உங்களால் இதை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? இது நம்பமுடியாதது" என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.