என் மலர்
சினிமா செய்திகள்
நான் பேசியது தவறு.. மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு உங்களை கடவுளாக்குகிறேன் - மிஷ்கின்
- இயக்குநர் பா. ரஞ்சித்-இன் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் "பாட்டல் ராதா.
- டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசிய அவதூறு வார்த்தைகள் சர்ச்சைக்குள்ளானது.
இயக்குநர் பா. ரஞ்சித்-இன் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் "பாட்டல் ராதா." பா. ரஞ்சித்-இன் உதவி இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள பாட்டல் ராதா திரைப்படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த 24 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசிய அவதூறு வார்த்தைகள் சர்ச்சைக்குள்ளானது. இந்த விஷயத்தை குறித்து திரைத்துறையை சேர்ந்த பலரும் மிஷ்கினை கண்டித்து வீடியோவை பதிவிட்டனர். இதற்கெல்லாம் மிஷ்கின் இன்று நடந்த Bad Girl டீசர் வெளியீட்டு விழாவில் பதில் கொடுத்து பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது "பாடலாசிரியர் தாமரை, லெனின் பாரதி, லட்சுமி ராமகிருஷ்ணன், சசிக்குமார், நடிகர் அருள் தாஸ், தயாரிப்பாளர் எஸ்.தானு அவர்களுக்கு என்னுடைய வருத்தத்தையும் மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன்."
அதை தொடர்ந்து பேசிய அவர் " ஒரு நகைச்சுவைக்கு மனிதன் பொய்யாக சிரிக்க முடியாது அவனது ஆழ் மனதில் இருந்துதான் சிரிக்கிறார். அன்று நான் பேசியதும் அப்படி தான் நான் செய்த நகைச்சுவையில் பத்திரிக்கையாளர் உள்பட அனைவரும் சிரித்தனர். அப்படி பேசும் போது சில அவதூறு வார்த்தைகள் வந்துவிட்டது அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
மேடை நாகரீகம் வேண்டும் என சொல்கிறார்கள், நான் ஒரு கூத்து கலைஞர்கள் இருக்கும் மேடையில் நின்று பேசுகிறேன். சங்ககால நாடகங்களில் வசை வார்த்தை வைத்து பாடுவதில்லையா. திருக்குறளில் காமத்துப் பால் அகராதி இல்லையா?. ஒரு படத்திற்கு இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற ஆபாசமான டைட்டில் வைக்கப்படுகிறது அதை யாரும் கேட்பதில்லை. நன் சினிமாவையும் , மனிதர்களையும் நேசித்துக் கொண்டே இருப்பவன் நான்." என மிகவும் எமோஷனலாக பேசியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.