என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![பவதாரிணி இசையமைத்த புயலில் ஒரு தோணி படத்தின் இசைத்தட்டை வெளியிட்ட இளையராஜா பவதாரிணி இசையமைத்த புயலில் ஒரு தோணி படத்தின் இசைத்தட்டை வெளியிட்ட இளையராஜா](https://media.maalaimalar.com/h-upload/2025/02/12/9238429-bhav.webp)
பவதாரிணி இசையமைத்த "புயலில் ஒரு தோணி" படத்தின் இசைத்தட்டை வெளியிட்ட இளையராஜா
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- புதுமுக நடிகர் விஷ்ணு பிரகாஷ்க்கு ஜோடியாக அறிமுக நடிகை அர்ச்சனா சிங் நடித்திருக்கிறார்.
- பி.ஜி. பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரோமீலா நல்லையா தயாரித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் ஈசன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'புயலில் ஒரு தோணி'. இதில் புதுமுக நடிகர் விஷ்ணு பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அறிமுக நடிகை அர்ச்சனா சிங் நடித்திருக்கிறார்.
பி. இளங்கோவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு ராஜா பவதாரணி இசையமைத்திருக்கிறார். மணி வர்மா கலை இயக்குநராக பணியாற்றியிருக்கும் இந்தப் படத்தின் படத்தொகுப்பு பணிகளை எஸ்.பி. அகமது மேற்கொண்டிருக்கிறார்.
க்ரைம், த்ரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை பி.ஜி. பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரோமீலா நல்லையா தயாரித்திருக்கிறார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற மறைந்த பாடகி பவதாரிணி நினைவேந்தல் நிகழ்ச்சியில், அவர் இசையமைத்த புயலில் ஒரு தோணி படத்தின் இசைத்தட்டை தந்தை இளையராஜா வெளியிட்டார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.