என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![இந்தியன் 2 படத்தின் பாரா பாடல் ப்ரோமோ வீடியோ வெளியீடு இந்தியன் 2 படத்தின் பாரா பாடல் ப்ரோமோ வீடியோ வெளியீடு](https://media.maalaimalar.com/h-upload/2024/05/21/2282993-indian-2-paara-song.webp)
இந்தியன் 2 படத்தின் "பாரா" பாடல் ப்ரோமோ வீடியோ வெளியீடு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
- இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இயக்குநர் சங்கர் மற்றும் கமல் ஹாசன் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் "இந்தியன் 2". அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் முதல் பாடல் நாளை (மே 22) வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் "பாரா" நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. மேலும், இந்த பாடலுக்கான ப்ரோமோ வீடியோவையும் வெளியிட்டு உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியன் 2 படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, விவேக், நெடுமுடி வேனு, சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், மனோபாலா, குல்ஷன் க்ரோவர், பியூஷ் மிஷ்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஜுலை 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
An Indian rides forth with courage & valor! ? Here's a promo of the 1st single #PAARAA from INDIAN-2. ?? Full song is dropping Tomorrow at 5️⃣ PM. ??
— Lyca Productions (@LycaProductions) May 21, 2024
Rockstar @anirudhofficial musical ?
Lyrics @poetpaavijay ✍?
Vocals @anirudhofficial #ShruthikaSamudhrala ?️#Indian2 ??… pic.twitter.com/dz2JeTiqP8
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.