என் மலர்
சினிமா செய்திகள்

மீடியா துறை ஒருதலைப்பட்சமாக நடந்துக் கொள்வது வருத்தமளிக்கிறது - ஜோதிகா

- அடுத்ததாக ஜோதிகா `டப்பா கார்டல்' என்ற நெட்பிளிக்ஸ் வெப் தொடரில் நடித்துள்ளார்.
- நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கடந்த ஆண்டு ஜோதிகா நடிப்பில் ஷைத்தான் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இரண்டு இந்தி திரைப்படங்கள் வெளியானது. இந்த இரண்டு திரைப்படமுமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் அடுத்ததாக ஜோதிகா `டப்பா கார்டல்' என்ற நெட்பிளிக்ஸ் வெப் தொடரில் நடித்துள்ளார். இவருடன் மலையாள நடிகை நிமிஷா சஜயன், ஷபானா ஆஸ்மி, ஷாலினி பாண்டெ, அஞ்சலி ஆனந்த் மற்றூம் கஜராஜ் ராவ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்தொடரை ஹிதேஷ் பாட்டியா இயக்கியுள்ளார். இந்த வெப் தொடர் அண்மையில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் ஜோதிகா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் அவரின் கணவனான சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படத்திற்கு பல எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தது இதுக்குறித்து அவர் பேசியுள்ளார்.
அதில் அவர் " நான் பல மோசமான திரைப்படங்களை பார்த்துள்ளேன் ஆனால் அந்த திரைப்படங்கள் பாக் ஆபிஸில் நல்ல கலெக்ஷன் பெற்று ஹிட்டடித்துள்ளது.
ஆனால் அந்த திரைப்படங்களுக்கு விமர்சனங்கள் அவ்வளவு மோசமாக எழவில்லை. ஆனால் என் கணவன் திரைப்படம் நடித்து வெளிவரும் போது விமர்சகர்கள் மிகவும் மோசமான கருத்துகளை முன் வைக்கின்றனர். இது நியாயமற்றது. கங்குவா திரைப்படத்தில் சில பகுதிகள் சரியாக இல்லைத்தான் ஆனால் அவர்கள் அப்படத்திற்கான கடுமையான் உழைப்பை செலுத்திருக்கிறார்கள். அப்படத்திற்கு பல ஆயிரம் பேர் வேலை செய்துள்ளனர்.
சில மோசமான திரைப்படத்திற்கு கிடைக்காத எதிர்மறை விமர்சனங்கள் கங்குவா திரைப்படத்திற்கு கிடைத்தது என்னை அது பாதித்தது. மீடியா துறை இப்படி பாரபட்சமாக நடந்துக் கொள்வது வருத்தமளிக்கிறது." என கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.