என் மலர்
சினிமா செய்திகள்
துருவ நட்சத்திரம் படத்திற்கு சூர்யா ஓகே சொல்லாதது மிக வருத்தம் - மனம் திறந்த கவுதம் மேனன்
- தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன்.
- டோமினிக் திரைப்படம் வரும் ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன். இயக்கம் மட்டுமின்றி திரைப்பட தயாரிப்பு மற்றும் நடிப்பு என பலதுறைகளில் தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறார். திரைப்படங்களில் நடித்துக் கொண்டே, மம்மூட்டி நடிக்கும் மலையாள திரைப்படமான டோமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ் திரைப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். திரைப்படம் வரும் ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் கவுதம் மேனன் கூறியதாவது "துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்கு சூர்யா ஒகே சொல்ல யோசிதிருக்க கூடாது. அவர் அந்த திரைப்படத்திற்கு ஒகே சொல்ல வில்லை. அவரை வைத்து நான் காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் என இரண்டு மெகா ஹிட் திரைப்படத்தை இயக்கியுள்ளேன். மூன்றாவதாக நான் துருவ நட்சத்திரம் கதையை கூறும் போது அவர் யோசித்தார். அவர் என்னை நம்பி இருக்கலாம். நான் தான் அப்படத்தை தயாரிக்கிறேன் நஷ்டம் வந்தாலும் அது எனக்கு தான். அப்படி இருந்தும் அப்படத்தின் கதையை அவர் தேர்வு செய்யவில்லை. இரண்டு திரைப்படம் ஒன்றாக பணியாற்றிவிட்டோம் மூன்றாவதாக இந்த திரைப்படத்தில் என்ன தப்பாகிவிட போகுது? அந்த திரைப்படம் நடக்கவில்லை என்றாலும்.. அவர் இந்த திரைப்படத்திற்கு நோ சொன்னது எனக்கு மிக வருத்தம்" என கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.