என் மலர்
சினிமா செய்திகள்
ஜாக்கி சானின் "கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்" - வேற லெவல் டிரெய்லர் வெளியீடு
- சண்டை காட்சிகளுக்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
- இந்தப் படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகிறது.
உலகம் முழுக்க காமெடி கலந்த ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஜாக்கி சான். 90-களில் பிறந்து வளர்ந்தவர்களில் பலர் ஜாக்கி சானின் ரசிகர்களாக உள்ளனர். இவர் படங்களில் அசாத்திய சண்டை காட்சிகள் மற்றும் காமெடிக்கென தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
இவர் நடித்து கடந்த 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் "கராத்தே கிட்." இந்தப் படத்திற்கு உலகம் முழுக்க நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், பாக்ஸ் ஆஃபிசில் இந்தப் படம் 359 மில்லியன் டாலர்களை வசூல் செய்தது. நடிகர் ஜாக்கி சான் திரைப்படங்களில் நடிப்பதை பெருமளவு குறைத்துவிட்டார்.
இவர் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு "ரைட் ஆன்" என்ற திரைப்படம் வெளியானது. இந்த நிலையில், ஜாக்கி சான் நடிப்பில் உருவாகி இருக்கும் "கராத்தி கிட்: லெஜண்ட்ஸ்" திரைப்படம் உருவாகி அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படம் அடுத்த ஆண்டு மே 30ம் தேதி வெளியாகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.