search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ரவி-ஆர்த்தி விவாகரத்து வழக்கு- அடுத்த மாதம் ஒத்திவைப்பு
    X

    ரவி-ஆர்த்தி விவாகரத்து வழக்கு- அடுத்த மாதம் ஒத்திவைப்பு

    • சமாதான பேச்சுவார்த்தைக்கு நடிகர் ரவி- ஆர்த்தி தம்பதி 3 முறை ஆஜராகி உள்ளனர்.
    • இனி விவாகரத்து வழக்கு விசாரிக்கப்படும் என அறிவிப்பு.

    மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் ரவி மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணைக்காக இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, ரவி, ஆர்த்தி தம்பதியிடையே சமரச பேச்சுவார்த்தை முடிவடையவில்லை என்று மத்தியஸ்தர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

    இதையடுத்து, விவாகரத்து வழக்கு தொடர்பாக சமரச தீர்வு மையத்தில் ரவி, ஆர்த்தி இருவரும் மனம் விட்டு பேசுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ரவி மற்றும் ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த வழக்கின் மறுவிசாரணை 18-ந்தேதிக்கு (இன்று) ஒத்தி வைக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற விசாரணையின் போது, சமாதான பேச்சுவார்த்தைக்கு நடிகர் ரவி- ஆர்த்தி தம்பதி 3 முறை ஆஜராகி உள்ளனர். இதனால் இனி விவாகரத்து வழக்கு விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு விவாகரத்து வழக்கை அடுத்த மாதம் 15-ந்தேதிக்கு ஒத்திவைத்து சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    Next Story
    ×