search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    KALKI OTT
    X

    நெட்பிளிக்ஸ்-ல் இந்தி... அமேசானில் தமிழ்... கல்கி 2898 ஏடி படத்தின் ஓடிடி அப்டேட்

    • கல்கி திரைப்படம் இதுவரை உலகமெங்கும் 1100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
    • கல்கி படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி பதிப்பு அமேசான் பிரைமில் வெளியாகிறது.

    'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

    மகாபாரத யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். வெளியான முதல் நாளிலேயே ரூ.180 கோடி வசூலுடன் ஆட்டத்தைத் தொடங்கிய 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது.

    கல்கி திரைப்படம் இதுவரை உலகமெங்கும் 1100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இரண்டாம் பாகத்தை நோக்கி மக்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

    இந்நிலையில் படத்தின் ஓடிடி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் இந்தி மொழி பதிப்பு நெட்பிளிக்ஸ்-ல் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெளியாகிறது.

    அதே போல் கல்கி படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழி பதிப்பு அமேசான் பிரைமில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெளியாகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×