என் மலர்
சினிமா செய்திகள்
சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவை பற்றிய ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியிட்ட கமல்ஹாசன்
- இந்தியன் 2 திரைப்படத்தை தொடர்ந்து மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- போற்றும் வகையில் அவரை பற்றி ஆவணப்படம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தை தொடர்ந்து மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் தற்பொழுது இயக்குனர் இமயமான சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவை கவுரவிக்கும் வகையில் அவர் இந்திய சினிமாவிற்காக செய்த பங்களிப்பிற்கு போற்றும் வகையில் அவரை பற்றி ஆவணப்படம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
சிங்கிதம் ஸ்ரீனிவாசன் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய புஷ்பக விமானா, அபூர்வ சகோதரர்கள் மற்றும் மாயா பசார் ஆகிய திரைப்படங்கள் சினிமா உலகின் வரலாற்றில் இடம் பெற்ற திரைப்படங்களாகும்.
இந்நிலையில் இவரை பற்றிய அபூர்வ சிங்கீதம் ஆவண படத்தின் டிரெய்லரை ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் தற்பொழுது வெளியிட்டுள்ளது. திரைப்படம் நாளை டிசம்பர் 9 ஆம் தேதி மாலை 6 மணிக்கு ராஜ்கமல் பிலிம்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.