என் மலர்
சினிமா செய்திகள்
காதல் கணவனுக்கு lip-lock அடித்த கீர்த்தி சுரேஷ் - புகைப்படம் வைரல்
- கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் 15 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
- இந்தியில் 'தெறி' படத்தின் ரீமேக்கான பேபி ஜான் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் 'நடிகையர் திலகம்' படத்திற்காக தேசிய விருது பெற்றார். தமிழ் தெலுங்கில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இந்தியில் 'தெறி' படத்தின் ரீமேக்கான பேபி ஜான் திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் 15 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில், கோவாவில் கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் திருமணம் இருவீட்டார் முன்னிலையில் எளிமையான முறையில் கடந்த 12 ஆம் தேதி நடைபெற்றது. திருமண புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இணையத்தில் மிகவும் வைரலானது.
இதைத்தொடர்ந்து இன்று கிறிஸ்துவ முறைபடி கோவாவில் திருமணம் நடந்தது. அப்பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கீர்த்தி அவரது இணையத்தில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே தற்பொழுது வைரலாகி வருகிறது.
கீர்த்தி வெள்ளை நிற கவுனில் மற்றும் ஆண்டனி வெள்ளை கோட் சூடில் இருக்கிறார். இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகின்றனர். இருவரும் இணைந்து லிப் லாக் செய்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
#ForTheLoveOfNyke ? pic.twitter.com/DWOoqarM43
— Keerthy Suresh (@KeerthyOfficial) December 15, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்