என் மலர்
சினிமா செய்திகள்
AK-யுடன் எப்போ படம் பண்ணுவீங்க? லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்
- நடிகர் ரஜினிகாந்த் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
- கூலி திரைப்படம் வருகிற மே மாதம் ரிலீசாகும் என தகவல்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக உருவெடுத்து இருப்பவர் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி படத்தை இயக்கி வருகிறார். கூலி படத்தில் நடிகர் ரஜினியுடன் சத்யராஜ், நாக்ராஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைக்கும் கூலி திரைப்படம் இந்த ஆண்டு மே மாத வாக்கில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கூலி படத்தை இயக்கும் இயக்குநர் லோகேஷ் னராஜ் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அஜித் குமார் படம் இயக்குவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார்.
அப்போது பேசிய அவர், "எல்லோரையும் போல், எனக்கும் அஜித் குமார் சாருடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. கூடிய சீக்கிரம் அது நடக்கும் என்று நினைக்கிறேன்," என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.