என் மலர்
சினிமா செய்திகள்
மத கஜ ராஜா படத்தின் சிக்கு புக்கு பாடலின் ப்ரோமோ வெளியானது
- மத கஜ ராஜா வருகிற 12-ந்தேதி பொங்கலையொட்டி வெளியாகவுள்ளது
- இப்படத்தில் விஷால் பாடிய மை டியர் லவ்வர் பாடல் 12 வருடங்கள் முன்பே மிக வைரலானது.
சுந்தர் சி 2013 ஆம் ஆண்டு 'மத கஜ ராஜா' எனும் திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இப்படம் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக திரைக்கு வரவில்லை. இப்படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நிதின் சத்யா, சோனுசூட், அஞ்சலி, மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி என பலரும் நடித்துள்ளனர்.
படத்தை விஷால் பிலிம் ஃபேக்டரி மற்றும் ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
இப்படம் வருகிற 12-ந்தேதி பொங்கலையொட்டி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் புது டிரெய்லரை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது.
விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஷால் பாடிய மை டியர் லவ்வர் பாடல் 12 வருடங்கள் முன்பே மிக வைரலானது.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற சிக்கு புக்கு பாடலின் ப்ரோமோ இன்று வெளியானது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
Music that makes my heart go like a #ChikkuBukku rail vandi ??A peppy and sweet number from #MGR. Watch the promo now! #MadhaGajaRajaFromJan12 Kings of Entertainment @VishalKOfficial #SundarC @iamsanthanam A @vijayantony musical @yoursanjali @GeminiFilmOffl @GeminiAudio… pic.twitter.com/Jx2O2moltM
— ????????? ??????????? (@varusarath5) January 8, 2025