என் மலர்
சினிமா செய்திகள்
நான் மன்னிப்பு கேட்கக்கூடியவனா? எரிமலை குமுறினால்... மன்சூர் அலிகான்
- திரிஷா குறித்து நான் தவறாக பேசவே இல்லை.
- கண்டன அறிக்கையை நடிகர் சங்கம் வாபஸ் பெற வேண்டும்.
லியோ படத்தில் நடித்தது குறித்து பேசிய மன்சூர் அலிகான் திரிஷா குறித்து மிகவும் சர்ச்சனையான கருத்துக்களை கூறினார். மன்சூர் அலிகானின் இந்த கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. நடிகைகள் திரிஷா, மாளவிகா மோகனன், பாடகி சின்மயி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்தது.
இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், சக நடிகர்களைப் பற்றி நகைச்சுவை என்ற பெயரில் தரக்குறைவாக பேசிய மன்சூர் அலிகானை தென்னிந்தியா நடிகர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. எந்த ஊடகம் முன்பு அவர் பேசினாரோ அந்த ஊடகம் முன்பு உண்மை மனதுடன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுகிறோம். மேலும் தன் தவறு உணர்ந்து, மனம் வருந்தி, உண்மையாக பொது மன்னிப்பு கூறும் வரை அவரை சங்கத்திலிருந்து ஏன் தற்காலிகமாக நீக்கம் செய்யக்கூடாது என கூறியிருந்தது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், திரிஷாவை நான் பாராட்டி பேசியதற்காக அவர் எனக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். திரிஷா குறித்து நான் தவறாக பேசவே இல்லை. நான் மன்னிப்பு கேட்கக்கூடியவனா? எரிமலை குமுறினால் எல்லோரும் ஓடிப்போய் விடுவீர்கள். நடிகர் சங்கம் இமாலய தவறை செய்துள்ளது. கண்டன அறிக்கையை நடிகர் சங்கம் வாபஸ் பெற வேண்டும். என்னை கருப்பு ஆடாக காட்டி விட்டு நடிகர் சங்கம் நல்ல பேர் எடுக்க முயற்சி செய்கிறது என கூறினார்.