என் மலர்
சினிமா செய்திகள்

அடுத்த ஆண்டனி வர்கீஸ் படத்தை தயாரிக்கும் மார்கோ தயாரிப்பாளர்

- கடந்த ஆண்டு வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மார்கோ திரைப்படம்.
- அடுத்ததாக கட்டாளன் என்ற திரைப்படத்தை ஷரீஃப் முகமத் தயாரிக்கிறார்.
கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி மலையாள மொழியில் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மார்கோ திரைப்படம்.
இத்திரைப்படம் மிகவும் ஆக்ஷன், வயலன்ஸ், துப்பாக்கி, ரவுடிசம் நிறைந்த கதைக்களமாக அமைந்துள்ளது. இதுவரை இப்படி வன்முறை நிறைந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகவில்லை என பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர். இத்திரைப்படத்தை ஷரீஃப் முகமத் தயாரித்தார்.
இந்நிலையில் அடுத்ததாக கட்டாளன் என்ற திரைப்படத்தை ஷரீஃப் முகமத் தயாரிக்கிறார். இப்படத்தை பால் ஜார்ஜ் இயக்குகிறார். படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஆண்டனி வர்கீஸ் கையில் கோடாரியுடன் எறியும் நெருப்பின் அருகே நிற்கிறார். இத்திரைப்படமும் ஒரு ஆக்ஷன் நிறைந்த திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
After Mega Blockbuster #Marco Shareef Muhammed PresentsCubes Entertainments' Production No. 2 – #KATTALAN starring ing PEPE Directed by Paul George.In the darkness of the wild, only the ruthless survive! ?@shareefvr1 pic.twitter.com/g14zjdQaVb
— Christopher Kanagaraj (@Chrissuccess) March 2, 2025
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.