என் மலர்
சினிமா செய்திகள்
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் மோகன்லால் - பிருத்விராஜின் எம்புரான்
- லூசிஃபர் இரண்டாம் பாகத்துக்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது..
- இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 27-ந்தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. மலையாளத்தைக் கடந்து மற்ற மொழி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இப்படம் தெலுங்கில் 'காட்ஃபாதர்' என்ற பெயரில் ரீமேக்கானது. சிரஞ்சீவி, நயன்தாரா நடித்த இப்படத்தை மோகன்ராஜா இயக்கினார்.
'லூசிஃபர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் வெளியாகும் என பிருத்விராஜ் அறிவித்திருந்தார். அதன்படி இரண்டாம் பாகத்துக்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது..
ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்து உள்ளார். இவர்களுடன் மஞ்சு வாரியர், இந்திரஜித் சுகுமாரன், டொவினோ தாமஸ், சாய்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 27-ந்தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இந்நிலையில் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை பிருத்விராஜ் அவரது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
On to the final leg. Home stretch! #L2E #EMPURAAN pic.twitter.com/J4GZks20WG
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) November 9, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.