என் மலர்
சினிமா செய்திகள்

திருச்சிற்றம்பலம் Vibe கொடுக்கும் NEEK திரைப்படம் - தமிழரசன் பச்சமுத்து

- தனுஷ் தற்பொழுது `நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
திரையுலகில் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, எழுத்து என பல பரிணாமங்களை கொண்டவர் தனுஷ். தனுஷ் தற்பொழுது `நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்" திரைப்படத்தை இயக்கியுள்ளார். திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. படத்தின் டிக்கெட் முன்பதிவு வேகமாக நடைப்பெற்று வருகிறது.
இந்தப் படத்தின் கதை இளைஞர்களின் காதல், உறவுமுறை, திருமணம் பற்றிய கதைக்களம் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் படத்தை பார்த்த லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து படத்தை பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது " திரைப்படத்தை பார்த்தேன் மிகவும் எனெர்ஜட்டிக்காகவும் , புத்துணர்ச்சியாகவும் இருந்தது. காதல் மற்றும் நட்பை மிகவும் எதார்த்தமாக பதிவிட்டுள்ளார். தனுஷ் சார் சொன்ன மாதிரி ஜாலியா வாங்க ஜாலியா போங்க. இப்படம் திருச்சிற்றம்பலம் வைப்ஸ்-ஐ தருகிறது" என பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.