என் மலர்
சினிமா செய்திகள்
நிவின் பாலி நடித்த `ஏழு கடல் ஏழு மலை' படத்தின் டிரெயிலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு
- ராம் தற்பொழுது ஏழு கடல் ஏழு மழை திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- இப்படம் சுரேஷ் காமாட்சியின் 'வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்' தயாரித்துள்ளது
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்துடன் இயக்கும் இயக்குனர்களில் இயக்குனர் ராம் மிக முக்கியமானவர். இவர் எடுக்கும் திரைப்படங்கள் ஒரு வாழ்க்கையின் தீஸிஸ் என்று சொல்லலாம். சமூதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட கதாப்பாத்திரங்களை மையமாக வைத்து படங்களை இயக்குவார்.
ராம் தற்பொழுது ஏழு கடல் ஏழு மழை திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படம் சுரேஷ் காமாட்சியின் 'வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் நடித்து விரைவில் திரையில் வெளியாகவுள்ளது. இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட்டு பல விருதுகளை வென்றும், சர்வதேச பார்வையாளர்களின் பாராட்டையும் wபெற்றது.
படத்தின் சில பாடலும் டீசரும் சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் டிரெய்லர் வரும் ஜனவரி 20 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.