என் மலர்
சினிமா செய்திகள்
மாமன்னன் திரைப்படத்திற்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு
- படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- ஒப்பந்தப்படி உதயநிதி கால்ஷீட் தராமல் புறக்கணிக்கிறார் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள் 'மாமன்னன்' வருகிற 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. படத்தின் டிரைலர் வெளியாகி 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். அத்துடன் படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மாமன்னன் திரைப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி ஓ.எஸ்.டி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ஏஞ்சல் என்னும் திரைப்படம் 80 சதவீதம் முடிந்துள்ளதாகவும், மீதமுள்ள 20 சதவீத பட சூட்டிங்கிற்கு, ஒப்பந்தப்படி உதயநிதி கால்ஷீட் தராமல் புறக்கணிக்கிறார் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.