என் மலர்
சினிமா செய்திகள்
காதலர் தினத்தன்று வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்'
- இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர் ஆகியோர் நடித்துள்ளனர்.
- டிராகன் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக டிராகன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர் , விஜே சித்து, ஹர்ஷத் மற்றும் பிரபல இயக்குநர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள ரைஸ் ஆஃப் தி டிராகன் மற்றும் வழித்துணையே பாடல்கள் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், 'டிராகன்' திரைப்படம், வருகிற பிப்ரவரி 14ம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
#Dragon in theatres from Feb 14 Happy Bday #Aghoram sir ? pic.twitter.com/deUQtLVUu2
— Pradeep Ranganathan (@pradeeponelife) January 15, 2025