search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    `வினோத்ராஜ மிஸ் பண்ணிடாத - சூரிக்கு அப்போவே அட்வைஸ் பண்ண வெற்றிமாறன்
    X

    `வினோத்ராஜ மிஸ் பண்ணிடாத' - சூரிக்கு அப்போவே அட்வைஸ் பண்ண வெற்றிமாறன்

    • இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • 'கொட்டுக்காளி' திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

    கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு மக்களின் ஆதரவை பெற்று பல விருதுகளையும் வென்றது. இதனால் இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது.

    இந்நிலையில், சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வரவுள்ளது. திரைப்படத்தில் இவர்கள் நடித்த கதாப்பாத்திரமான பாண்டி மற்றும் மீனா பற்றிய பதிவுகளை சில நாட்களுக்கு முன் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர்.

    படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. அதில் ஒரு நேர்காணலில் சூரி சில விஷயங்களை பகிர்ந்தார். அதில் "கொட்டுக்காளி படம் விடுதலை திரைப்படம் நடிக்கும் போது வந்த கதையாகும். விடுதலை படம் முடிவது வரை எந்த படத்திலும் கமிட் ஆக கூடாது என வெற்றிமாறன் கூறியிருந்தார். ஆனால் நான் வினோத்ராஜ் சொன்ன இக்கதையை சொன்னப்பின் அவர் வினோத்ராஜ் படத்தில் நடி என்றார். வினோத் ராஜ் இந்தியாவின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவர். அவனை மிஸ் பண்ணிடாதே என்று வெற்றிமாறன் கூறினார்.

    மேலும், கொட்டுக்காளி திரைப்படம் விடுதலை மற்றும் கருடன் திரைப்படத்தில் இருந்து மிகவும் வித்தியாசமானது. இப்படத்தை விடுதலை மற்றும் கருடன் படத்தை போல் இருக்கும் என மனநிலையில் வர வேண்டாம், இப்படத்தை புது கண்ணோடத்தில் வந்து பாருங்கள். இம்மாதிரி கதையை ஆதரியுங்கள்." என்று கேட்டுக் கொண்டார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×