என் மலர்
சினிமா செய்திகள்
புஷ்பா-னா Fire - Free Fire கேம் உடன் ஒப்பந்தம் செய்த படக்குழு
- புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் புஷ்பா 2 தி ரூல் என்ற பெயரில் உருவாகியுள்ளது
- புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. திரைப்படம் உலகமுழுவதும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இதையடுத்து புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் புஷ்பா 2 தி ரூல் என்ற பெயரில் உருவாகியுள்ளது. படத்தில் அல்லு அர்ஜுன் உடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் சில பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. படத்தில் ஸ்ரீலீலா கிஸிக் என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இந்நிலையில் புஷ்பா-2 திரைப்படத்தை விளம்பரப்படுத்த Free Fire ஆன்லைன் கேமிங் தளத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. இப்படத்தில் வரும் கதாப்பாத்திரங்கள், ஆயுதங்கள் உள்ளிடவற்றை கேமில் பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
ஃப்ரீ ஃபையர் ஆன்லைன் கேம் உலக புகழ்பெற்ற ஷூட்டிங் விளையாட்டாகும். இந்த விளையாட்டு 50 நபர்கள் ஒரு தனி தீவில் இறக்கி விடப்படுவர். 10 நிமிடங்களில் ஒருவரை ஒருவர் அவர்களை தற்காத்துக் கொண்டு கடைசியில் யார் உயிர் பிழைக்கிறார்கள் என்பதே இந்த விளையாட்டின் அம்சமாகும்.
The Biggest Game and the Biggest Movie are coming together for the biggest collaboration ???#FreeFire x #Pushpa2TheRule#PushpalnFFM #FreeFireMAX pic.twitter.com/YPlRv1mwHx
— Mythri Movie Makers (@MythriOfficial) November 10, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.