என் மலர்
சினிமா செய்திகள்
X
`கில்லி' பிரியாணி என பெயர் வைத்த ரஜினிகாந்த்
Byமாலை மலர்19 Jun 2024 12:26 PM IST
- பிரியாணிக்கு "கில்லி பிரியாணி' என பெயரிடப்பட்டுள்ளது.
- ஏராளமான வாடிக்கையாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள பிரபலமான தாஜ் கோரமண்டல் ஓட்டலுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அந்த வகையில் ஒரு நாள் ஓட்டலில் அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது பிரியாணி பரிமாறப்பட்டது. சாப்பிட்டுக் கொண்டிருந்த ரஜினி இடம் பிரியாணி எப்படி இருக்குது சார் என ஓட்டல் ஊழியர்கள் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த் சும்மா கில்லி மாதிரி இருக்கு என கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அன்று முதல் அந்த பிரியாணிக்கு "கில்லி பிரியாணி' என பெயரிடப்பட்டுள்ளது.
இதையொட்டி இந்த பிரியாணி மிகவும் பிரபலம் அடைந்தது. இதற்கான ஏராளமான வாடிக்கையாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
Next Story
×
X