search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியவர் - மறைந்த ரத்தன் டாடாவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்
    X

    லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியவர் - மறைந்த ரத்தன் டாடாவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்

    • டாடா குழும தலைவர் ரத்தன் டாடா நேற்றிரவு காலமானார்.
    • அவரது உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    டாடா குழும தலைவர் ரத்தன் டாடா நேற்றிரவு காலமானார். அவரது உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தொழில் அதிபரும் கட்டுரையாளருமான சுஹேல் சேத், ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

    ரத்தன் டாடா மறைந்ததுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் "உலக வரைபடத்தில் இந்தியாவை தனது தொலைநோக்குப் பார்வையாலும் ஆர்வத்தாலும் இடம்பிடிக்கச் செய்த மனிதர்

    ஆயிரக்கணக்கான தொழிலதிபர்களை ஊக்கப்படுத்தியவர்..

    பல தலைமுறைகளாக லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கியவர்.

    அனைவராலும் நேசிக்கப்பட்டு மதிக்கப்பட்ட மனிதர்..

    அவருக்கு எனது ஆழ்ந்த வணக்கங்கள். இந்த மாபெரும் மனிதனுடன் செலவழித்த ஒவ்வொரு நொடியையும் நான் என்றென்றும் போற்றுவேன்.. இந்தியாவின் உண்மையான மகன் இனி இல்லை.. ஆழ்ந்த இரங்கல்." என கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×