search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ரஞ்சித்தின் மிகப்பெரிய கனவு படைப்பு தங்கலான்- ஜீ. வி பிரகாஷ்
    X

    ரஞ்சித்தின் மிகப்பெரிய கனவு படைப்பு தங்கலான்- ஜீ. வி பிரகாஷ்

    • ஞானவேல் ராஜாவுடன் இணைந்து ஏராளமான படங்களில் பணியாற்றி இருக்கிறேன்.
    • இந்த படம் அவருக்கு சிறந்த தங்கமாக அமையும்.

    சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'தங்கலான்' படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

    இதில் இசையமைப்பாளர் ஜீ. வி பிரகாஷ் பேசுகையில், ''இந்தத் திரைப்படத்தில் அனைவரும் கடினமாக உழைத்து இருக்கிறார்கள். அவர்களுடன் நானும் இணைந்து ஒரு சிறிய அளவில் உழைத்திருக்கிறேன். பழங்குடி இன மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் இசையையும் நேர்மையாக பதிவு செய்ய முயற்சி செய்திருக்கிறேன். என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறேன். ரசிகர்களாகிய நீங்கள் பாருங்கள். கேளுங்கள்.

    தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா- இயக்குநர் பா. ரஞ்சித் -நடிகர் விக்ரம் ஆகியோருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஏனெனில் அவர்கள் கொடுத்த இந்த வாய்ப்பினை நான் சிறப்பாக பயன்படுத்தி முயற்சி செய்திருக்கிறேன். விக்ரமுடன் 'தெய்வத்திருமகள்', 'தாண்டவம்' ஆகிய படங்களை தொடர்ந்து, 'தங்கலான்' படத்தில் இணைந்திருக்கிறேன்.

    இயக்குநர் பா. ரஞ்சித்தின் மிகப்பெரிய கனவு படைப்பு இது. இதில் என்னையும் இணைத்துக் கொண்டதற்கு அவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஞானவேல் ராஜா- அவருடன் இணைந்து ஏராளமான படங்களில் பணியாற்றி இருக்கிறேன். இந்த படம் அவருக்கு சிறந்த தங்கமாக அமையும். இந்தத் திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன். '' என்றார்.

    Next Story
    ×